நம்பிக்கை தரும் சத்குருவின் வாசகங்கள்! (Motivational Quotes in Tamil )
நீங்கள் பொருளீட்டுவது நலமாய் வாழ்வதற்கு,மன அழுத்தத்தினால் உங்களை நீங்களே அழிப்பதற்கல்ல.
நீங்கள் புத்திசாலியான மனிதராக இருந்தால்,
இயல்பாகவே நீங்கள் அன்பாகவும்
இணைத்துக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பீர்கள்.
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால்
உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.
மகிழ்ச்சியான முகம்தான், எப்போதுமே அழகான முகம்.
விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது.உங்கள் விதியை நீங்களே உருவாக்கத்தவறும்போது அது தலைவிதியாகிறது.
உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக கசப்பான விஷயங்கள்நிகழ்ந்திருந்தால், நீங்கள் விவேகமானவராகமாறவேண்டும், காயப்பட்டவராக அல்ல.
கடைவீதியில், குறைவாகக் கொடுத்து அதிகமாகப்பெற்றுக்கொள்வது சாமர்த்தியமாகக் கருதப்படுகிறது.உண்மையான உறவில், உங்களுக்கு என்ன கிடைக்கும்என்று கவலைப்படாமல் உங்களால் முடிந்ததையெல்லாம் கொடுப்பீர்கள்.
மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின்
விளைவாக ஏற்படுவதில்லை – உங்களை நீங்களே
நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது.
வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகப் பார்த்தால்,
எங்கும் சாத்தியங்களையே காண்பீர்கள்.
வாழ்க்கையை நீங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்த்தால்,
எங்கும் பிரச்சனைகளையே பார்ப்பீர்கள்.
உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும். உங்கள்
மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது.
சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான், மனிதர்கள்
சாதாரணமாக தாங்கள் இருக்கும் நிலையைவிட
மேன்மையான நிலைக்கு உயரமுடியும்.
யோகா என்றால் வளைந்துகொடுக்கும் தன்மையுடன்
இருப்பது – உடலளவில் மட்டுமில்லாமல்
எல்லாவிதத்திலும். அப்படி இருந்தால் நீங்கள் எங்கு
இருந்தாலும் நலமாக இருப்பீர்கள்.
நீங்கள் எந்த அளவு வெற்றிகரமாக இருக்கிறீர்கள்
என்பது, உங்கள் உடலையும் மனதையும் உங்களால் எந்த
அளவு சிறப்பாக பயன்படுத்த முடிகிறது என்பதை
சார்ந்திருக்கிறது.
தனிமனிதர்களிடத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் உலகில்
மாற்றம் ஏற்படுத்தமுடியாது.
யாருமே நீங்கள் குறைபாடற்ற சிறந்த மனிதராக
இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால்,
இன்னும் சிறந்தவராக மாற நீங்கள் தொடர்ந்து
முயல்கிறீர்களா என்பதே மிக முக்கியமானது.
உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை –
போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே
உள்ளன.
உங்களுக்குள் நீங்கள் நல்ல சமநிலையுடன்
இருக்கும்போது மட்டும்தான், உங்கள் புத்திசாலித்தனம்,
திறமை மற்றும் ஆற்றல் முழுமையாக வெளிப்படும்.
நீங்கள் ஆனந்தமாகவோ துக்கமாகவோ இருப்பதை வேறொருவரால் முடிவுசெய்ய
இயன்றால், அதுவல்லவா இருப்பதிலேயே மோசமான அடிமைத்தனம்?
நீங்கள் எங்கிருந்தாலும், எத்தகைய சூழ்நிலைக்கு
வெளிப்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு
சூழ்நிலையிலிருந்தும் நல்ல விஷயங்களை
எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்வனுபவம் வீண்போக
விடாதீர்கள்.
நீங்கள் எப்போதும் சந்தேகத்துடன், எல்லோரும்
உங்களிடம் குற்றம் கண்டுபிடிக்கவே செயல்படுகிறார்கள்
என்கிற நினைப்பில் இருந்தால், வாழ்க்கையில் மிகச்
சிறிய விஷயங்களை மட்டுமே உங்களால் செய்ய முடியும்.
நம்பிக்கை மிக முக்கியம்.
உங்களால் செய்யமுடியாததை நீங்கள் செய்யாவிட்டால்
பரவாயில்லை. ஆனால் உங்களால் செய்யமுடிந்ததை
நீங்கள் செய்யாவிட்டால், உங்கள் வாழ்க்கை
பரிதாபத்திற்குரியதாய் ஆகிவிடும்.
நீங்கள் கடந்தகாலத்தை நினைவுகூர்ந்திட முடியும்,
நிகழ்காலத்தை அனுபவித்துணர முடியும், ஆனால்
வருங்காலத்தை விரும்பும்படி உருவாக்கிட முடியும்.
Motivational Quotes in Tamil and English – Part 1
ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்
Bigger successes are comprised of little changes.
நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.
Hope comes with success. But success will come only to those with hope.
மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்
Learn to control your mind before it controls you
நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.
No matter how slow you do something until you stop
தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது.
Courage is one step above fear
Motivational Quotes in Tamil and English – Part 2
அறிவை விட முக்கியமானது, உங்கள் இலக்கை அடைய உங்கள் விருப்பம்.
The desire to achieve a goal is more important than knowledge.
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
Able one achieves it, one who cannot teach it.
மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்.
Do not exclaim at the mountain’s height. If you climb the hill, even that is at your feet.
முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.
The rabbit wins, the tortoise wins, but the effortlessness never wins.
இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்.
Your today’s pain may change as your strength tomorrow.
Motivational Quotes in Tamil and English – Part 3
நாம் வலியைத் தழுவி, அதை நமது பயணத்திற்கு எரிபொருளாக எரிக்க வேண்டும்.
Your pain can be used as fuel for your journey to success.
வெற்றி இலக்கை அடைய தோல்விகள் படிகட்டுகள்.
Failures are stairs to achieve the goal of success.
ஒரு சிக்கல் உங்கள் சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாகும்.
A problem acts as an opportunity for you to do your best.
உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.
Run if you can not fly.
Motivational Quotes in Tamil and English – Part 4
பழைய பழக்கங்கள் புதிய பாதைகளைத் திறக்காது.
Old habits do not open new paths.
ஒரு மனிதன் தன்னை உலகிற்கு புத்திசாலி என்று நிரூபிப்பதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான்.
A man succeeds when he stops proving himself to the world.
விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல.
Whenever you fall, it is to rise and not to weep.
நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.
The small efforts you make today are the nail roots of success that will change tomorrow.
கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.
The one who takes advantage of the opportunities available and achieves the fruit of success is the best genius.
Motivational Quotes in Tamil and English – Part 5
சிந்தனை மட்டும் செய்ய உனக்கு தெரியுமானால் நீயே உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்.
If you only know how to think you are the best counselor for yourself.
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.
Life is ours as long as we have faith in ourselves.
உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.
Get up with determination. Go to bed with satisfaction.
வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.
Focusing on your goals and not the obstacles is the key to success.
நீங்களே கட்டியெழுப்பும் சுவர்களால் மட்டுமே நீங்கள் அடைக்கப்பட்டுள்ளீர்கள்.
You are only blocked by walls that you build yourself.
Motivational Quotes in Tamil and English – Part 6
தன்னம்பிக்கை கொண்ட மனிதன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.
He who has self-confidence easily gains the trust of others.
நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல, ஒளி வீசப்போகும் விண்மீன்கள்.
We are not hiding female deer, but shining stars.
உன் திறமையை வெளி காட்டு, உலகம் உன்னை கண்டறியும்.
The world will easily find you if you show off your talent.
அற்புதமான ஒன்று நடக்கப்போகிறது என்று எப்போதும் நம்புங்கள்.
Always have the belief that something extraordinary is yet to happen.
கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்.
Learn from those who are learning at present rather than from those who knew already.
Motivational Quotes in Tamil and English – Part 7
நீங்கள் செய்யாவிட்டால் கனவுகள் செயல்படாது.
Dreams don’t work if you don’t.
தோல்வி வெற்றிக்கு நேர்மாறானது அல்ல, அது வெற்றியின் ஒரு பகுதியாகும்.
The opposite of success is not failure; it is a part of success.
உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்.
You try to be the change you would like to see in this world.
அமைதியாய் இருப்பவனை முட்டாள் என எண்ணிவிடாதே, பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
Do not think that he is quiet is a fool, for he who hears is wiser than he who speaks.
வாழ நினைப்பவனுக்கு வானம் கூட வாயிற் படி தான்.
For the one who thinks to live, even the sky is an entrance.
Motivational Quotes in Tamil and English – Part 8
விதைத்தவன் உறங்கலாம். ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.
The sower may sleep. But the seeds never sleep.
ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு.
Breakthrough a thousand obstacles and move forward.
உங்கள் சொந்த கனவுகளை உருவாக்குங்கள், அல்லது வேறு யாராவது உங்களைக் கட்டியெழுப்புவார்கள்.
Better create your dreams, or someone else will build you up.
பெரிய வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை நேசிப்பதே.
If you want to achieve something great, love your work.
நீங்கள் அதை கனவு காண முடிந்தால், நீங்கள் அதை அடைய முடியும்.
If you can dream about something, then you can achieve that too.
Motivational Quotes in Tamil and English – Part 9
உங்கள் உறுதியும் விடாமுயற்சியும் உங்களை ஒரு வெற்றிகரமான நபராக மாற்றும்.
Your determination and perseverance will make you a successful person.
செயல் அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளமாகும்.
Action is the foundation of all success.
கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். நாம் கடந்து சென்று கொண்டே இருப்போம்.
Difficulties keep coming. Let us keep passing.
சாமர்த்தியம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம். தைரியம் இருந்தால் எப்படியும் சாதிக்கலாம்.
If you have talent, you can overcome anything. Anything is achievable if you have courage.
வெற்றி என்பது கொடுத்து பெறுவது அல்ல முயன்று அடைவது.
Success is not about giving and receiving; it is about achieving.
Motivational Quotes in Tamil and English – Part 10
நீங்கள் முயற்சியை கைவிடாதவரை, வெற்றியும் உங்களை கைவிடுவதில்லை.
Success does not abandon you unless you give up the effort.
நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும். ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது.
Everything in our lives will change one day. But that does not change overnight.
அவரைப்போல் இவரைப்போல் இல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டு.
You need not live like them; live your life like you.
முயற்சி செய்ய தயங்காதே, முயலும் போது முட்களும் உன்னை முத்தமிடும்.
Do not hesitate to try; even the thorns will kiss you while trying.
லட்சியம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது.
If there is ambition, there will not be any indifference.
Motivational Quotes in Tamil and English – Part 11
தனித்து விட்டால் தான் நமது பலமும் பலவீனமும் நமக்கு தெரியும்.
We know our strengths and weaknesses only when we are alone.
ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு.
Break through a thousand obstacles and move forward
தாங்க முடியாத அளவிற்கு நமக்கு ஒருபோதும் துன்பம் ஏற்படுவதில்லை.
We never suffer unbearably.
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால், உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம்.
If the intention to achieve is deep in your heart, you can achieve anything with your consistent effort.
உனக்கான அடையாளத்தை உலகம் உணரும் வரை, உன்னைப் பற்றிய விமர்சனம்
ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும்.
Until the world identifies you, all criticisms will be against you.
Motivational Quotes in Tamil and English – Part 12
விடா முயற்சி மட்டுமே ஒவ்வொரு தோல்வியிலும் உன்னை புது வெற்றிக்கு தயார் செய்யும்.
Only consistent effort will prepare you for success in every failure.
தயக்கம் தடைகளை உருவாக்கும். இயக்கம் தடைகளை உடைக்கும்.
Reluctance will create barriers. The movement will break barriers.
முயற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும், உன் முயற்சியிடம்.
Try keeping up the good work. One day failure will fail your endeavor.
இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை. மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும்.
Trees do not wither about the falling of leaves. It will give rise to new leaves again.
வெற்றி பெற விரும்பினால், தடைகளை உடைத்து செல். நம்பிக்கையை விதைத்து செல்.
If you want to succeed, break down barriers and sow the hope.
Motivational Quotes in Tamil and English – Part 13
காத்திருந்தால், எதுவும் நடக்காது. இறங்கி போராடு. வெற்றி உன் மகுடம் ஆகும்.
If you wait, nothing will happen. Fight against, and success will be your crown.
ஒன்றை வெல்வதற்கு நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை போரிட வேண்டி இருக்கும்
You have to fight more than once to win something
நீ அடைய நினைத்த இலக்கை அடையும் வரை, கல் வந்தாலும் சொல் வந்தாலும் கலங்காமல் நீ முன்னேறு.
Until the goal is reached,
do not care about the stones and words thrown at you. Move forward without panic.
துன்பங்கள் துரத்தினாலும், சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று வெற்றி பெறுவதே தன்னம்பிக்கை உடைய மனிதனுக்கு அழகு.
Despite the chase of misery, Please do not get tired; stand up against it, Success is the beauty of a self-confident man.
சவால்கள் மேல் சவாரி செய்வதே வெற்றிக்கு வழி.
Riding over challenges is the way to success.
Motivational Quotes in Tamil and English – Part 14
நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்.
The future will welcome us if we make proper use of the present.
உன்னைத் தவிர நீ வெற்றியடைவதை வேறு யவராலும் தடுக்க முடியாது.
No one can stop you from succeeding except yourself.
பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள். வெற்றி உங்கள் காலடியில்.
Lift away fear and hesitation. Success is at your feet.
வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதே.
Success is the permanent way to try one more time, even after failure.
பலனை எதிர்ப்பார்க்காதே, நன்மையைச் செய்.
Do whatever you can, never expect anything in return.
Motivational Quotes in Tamil and English – Part 15
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல. முயற்சி செய்பவனே மனிதன்.
He who all breathe is not human. He who tries is a human.
கடக்க போகும் பெறும் பாதையை கண்டு வியக்கும் போது, கடந்து வந்த பெறும் பாதையை நினைத்து பாருங்கள்.
When wondering the path yet to cross, think of the great way you had already passed.
ஊக்கமும் உறுதியும் உள்ள ஒருவரால் தான் செயற்கரிய செயல்களை செய்ய முடியும்.
Only someone with motivation and determination can do passive actions.
நேற்றைய தோல்வியை மறந்து, நாளைய வெற்றியை நோக்கி, இன்றைய பொழுதை தொடங்குவோம். வெற்றி நமதே.
Forget yesterday’s failure, move on to tomorrow’s success, and start today’s journey. Success is ours.
தயங்குறவர்கள் கை தட்டுகிறார்கள். துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்கள்.
Hesitant clap their hands. The brave gets applause.
Motivational Quotes in Tamil and English – Part 16
நம்பிக்கை என்பது உன் கையில் இருக்கும் வரை, வெற்றி என்பது உன் கை தொடும் தூரம் தான்.
Hope is as long as it is in your hands; success is at the reach of your hand.
தோல்வி எத்தனை முறை உதைத்தாலும் மீண்டு வர முடியும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உன் தாரக மந்திரமாக இருந்தால்.
It doesn’t matter how many times you fail; you can quickly bounce back if you have self-confidence and perseverance.
நேற்றைய உங்களையும், இன்றைய உங்களையும் ஒப்பிட்டு பாருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்
Compare yourself yesterday with you today. Get progress in life.
வெற்றிக்கு தான் எல்லைகள். முயற்சிக்கு ஏது எல்லைகள். முயற்சித்துக் கொண்டே இரு. உன் லட்சியத்தை அடையும் வரை.
Only success has boundaries.
Effort doesn’t have one. Keep trying until you reach your goal.
உன் வெற்றிக்கு வழி உன்னிடம் உள்ள முயற்சியில் தான் உள்ளது. பிறர் இடம் எதிர்பார்க்காதே.
The way to your success lies in your effort.
Do not expect it from others.
Motivational Quotes in Tamil and English – Part 17
நடுங்கி நடுங்கி வாழ்ந்தால் நாடி இல்லாதவன் கூட உன்னை நசுக்கி விடுவான்
If you live trembling even a nerveless person will crush you.
புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
The buried seed just leaves the soil and grows into a tree!
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
He who is born human should not perish in vain
இங்கு பாதைகள் வெற்றியை தீர்மானிப்பது இல்லை. பயணிப்பவன் முயற்சிகளே வெற்றியை தீர்மானிக்கிறது.
It is not the paths that determine success. It depends upon the efforts of the traveler.
முயற்சி இருந்தால் செல்லும் பாதை எல்லாம் நாம் வெல்லும் பாதை தான்.
If you have great effort, all paths are open to you.
Motivational Quotes in Tamil and English – Part 18
பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி. பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே.
Success comes only with training and effort. Train yourself and make efforts; success is yours.
எப்போதும் உன் அடையாளத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே
Never leave your identity to anyone
தேவைப்படும் பொழுது நீ தேடப்படுவாய். அதுவரை அமைதியாய் இரு.
You will be sought when needed. Until then, be quiet.
உறுதியான முடிவும், முயற்சியும் இருந்தால் தான் அதன் பெயர் வெற்றி.
It is named a success only if it has a conclusive decision and effort.
Motivational Quotes in Tamil and English – Part 19
உன்னை வெல்லும் தகுதி தோல்விக்கே இருக்கும் போது.தோல்வியை வெல்லும் தகுதி,உனக்கு இல்லாமலா போய்விடும்.
When failure deserves to overcome you, can’t you overcome loss?
எப்போதும் தோல்வி அச்சத்தில் இருப்பதை விட, முயற்சி என்ற ஆபத்தை ஒரு முறை எதிர்கொள்வதே மேல்.
Rather than continually fearing failure, better try facing the challenge once.
மதி கொண்டு முயற்சித்தால் விதி என்று ஏதுமில்லை இங்கு.
If you try with wisdom, there is nothing called fate here.
முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை.
Keep trying until failure kneels before you.
மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டிக் கொள்வதை விட தனித்து நின்று, உங்கள் உண்மையான உயரத்தை காட்டுவதே தன்னம்பிக்கை.
Rather than showing you tall by standing on others shoulders, Stand alone, Self-confidence is about showing your actual height.
Motivational Quotes in Tamil and English – Part 20
சாயலில் வெற்றி பெறுவதை விட அசல் தோற்றத்தில் தோல்வி அடைவது நல்லது.
It is better to fail at the original appearance than succeed at the seam.
எதிரி இல்லை என்றால் இன்னும் நீ இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்.
If there is no enemy, then it means yet you are not working towards the goal.
விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே.
If you have a single thread of perseverance, you can quickly achieve the kite of success.
ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய் வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்.
Try as much as you can today without waiting for the day to dawn, and the pains can turn into successes.
எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும்.
‘I can do it is something you must always pronounce in your mind.
முதல் முயற்சி தோல்வி என்றால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள்,தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்.
If the first attempt fails, please try again; failure can be overcome by success.
பிரச்சனைகள் நம்மை செதுக்க வருவதாக நினைத்து எதிர் கொள்ளுங்கள், சிதைந்து போக மாட்டீர்கள்.
Remember that problems come to carve us, then you will never feel low.
Conclusion
எனவே, இவை தமிழில் மாணவர்களுக்கான சிறந்த வெற்றி ஊக்குவிப்பு மேற்கோள்கள். தமிழில் இந்த வெற்றி ஊக்கமளிக்கும் மேற்கோள்களை நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் பதிவை படித்தமைக்கு நன்றிகள் பல..!